christian song lyrics, christian telugu songs lyrics, christian english songs lyrics, christian tamil songs lyrics, christian hindi songs lyrics, christian malayalam songs lyrics, chriatian kannada songs lyrics christian bengali songs lyrics.

கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் | Kelungal Petrukolvirgal Tamil Christian Song Lyrics

Credits:

Lyrics & Executive Producer : Bro. Mohan C Lazarus.
Music: Sweeton J Paul
Tune composed by: J Godson Samuel

Lyrics:

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
விசுவாசத்துடனே கேளுங்கள்
எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

சுகம் பெற்றிடுங்கள்
விடுதலை பெற்றிடுங்கள்
அற்புதம் பெற்றிடுங்கள்
ஆசீர் பெற்றிடுங்கள்

இயேசுவின் நாமத்தினால்…
இயேசுவின் நாமத்தினால்

அல்லேலுயா அல்லேலுயா...

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் சாயலை கண்டிடுங்கள் - சுகம்

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள் - சுகம்

தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்
இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்
திறப்பிலே நின்று மன்றாடுங்கள்
தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள் - சுகம்

Full Video Song On Youtube:

📌(Disclaimer):
All rights to lyrics, compositions, tunes, vocals, and recordings shared on this website belong to their original copyright holders.
This blog exists solely for spiritual enrichment, worship reference, and non-commercial use.
No copyright infringement is intended. If any content owner wishes to request removal, kindly contact us, and we will act accordingly.

👉The divine message in this song👈

இந்தப் பாடலின் சுருக்கம், ஜெபம், விசுவாசம், மற்றும் தேடுதல் மூலம் தேவனிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்கள் என்பதைக் கவனமாக வலியுறுத்துகிறது. 🙏

பாடலின் மையச் செய்தி:
Jesus Christ நாமத்தில் விசுவாசத்துடன் கேட்பவர்கள் கண்டிப்பாகப் பெறுவார்கள் என்ற உறுதியான வாக்குத்தத்தம். மனமாறாத ஜெபம், முழு இதயத்துடன் தேவனைத் தேடுதல், மற்றும் தொடர்ந்து தட்டுதல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் மாற்றமும் ஆசீர்வாதங்களும் வரும் என இது சொல்லுகிறது.

சுருக்கமாக:

  • விசுவாசத்துடன் ஜெபித்தால் பதில் கிடைக்கும்

  • இயேசுவின் நாமத்தில் சுகம், விடுதலை, அற்புதம், ஆசீர்வாதம் கிடைக்கும்

  • தேவனை முழு இதயத்துடன் தேடினால் அவரை அறிய முடியும்

  • தொடர்ந்து ஜெபித்து நிலைத்திருந்தால் வாழ்க்கையிலும் தேசத்திலும் மாற்றம் வரும்

மொத்தத்தில், இது “கேளுங்கள்–பெறுவீர்கள், தேடுங்கள்–கண்டடைவீர்கள், தட்டுங்கள்–திறக்கப்படும்” என்ற வேதாகம வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் அமைந்த, விசுவாசத்தை ஊக்குவிக்கும் ஆராதனைப் பாடலாகும்.


***********
📖 For more Telugu and multilingual Christian content, visit: Christ Lyrics and More